விக்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது

 
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சமரசமாகத் தீர்த்துவைக்கப்பட்டதால், வழக்கு முடிவுக்கு வந்தது.

இன்று டெனீஸ்வரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

விக்னேஸ்வரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதால் தாங்களும் அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இரு தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லாது இத்தோடு முடித்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களினால் அறிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!