ஜப்பானின் புதிய பிரதமரானார் யோஷிஹிடே சுகா
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஷோ இராஜினாமா செய்ததை அடுத்து சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌளியிட்டுள்ளன.
ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதையடுத்து விடுதலை ஜனநாயக கட்சின் தலைவராக அந்த நாட்டின் நீண்ட நாள் அமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.இவர் நாளை முறைப்படி அந்த நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட இருக்கிறார்.
வரும் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராக யோஷிஹைட் சுகா நீடிப்பார். ஜப்பான் நாட்டின் கிராமத்தில் குழந்தை பருவத்திலேயே ஸ்ட்ராபெர்ரி விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டு 1948ல் தன்னை முழுமையாக யோஷிஹைட் சுகா ஈடுபடுத்திக் கொண்டு இருந்தார்.
1969ல் ஹோசி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பல்வேறு செய்தித்தாள்களும், டிவிக்களும் இவரை ஷின்சோவின் வலது கரம் என்றே வர்ணித்து வந்துள்ளன.