சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

திலீபனின் நினைவு தினம் அனுஷ்டித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் யாழ். நீதிமன்றினால், பிணையில் விடுதலை செய்யப்டப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் உள்ள சிறிசபாரத்தினத்தின் நினைவிடத்தில் நேற்று (15) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (16) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி 2 இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்துள்ளார்.

சிவாஜிலிங்கத்திற்கு சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, வி.மணிவண்ணன், க.சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!