இலங்கை தொடர்பான சர்வதேச பார்வையினை வலுப்படுத்துக – கனேடிய தூதுவரிடம் சாணக்கியன் கோரிக்கை

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று, இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள சாணக்கியனின் உத்தியாகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது பல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினரால் மூன்று முக்கிய கோரிக்கைகள் கனேடிய தூதுவரிடம் முன்வைக்கப்பட்டன:

  1. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான சர்வதேச பார்வையினை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
  2. இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச்சனைகளைக் கருத்திற் கொண்டு அவற்றுக்கான தீர்வுகள் உள்வாங்கப்படுவதற்காக சர்வேதேச ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.
  3. எமது பிரதேசங்களில் காணப்படும் பெண் தலைமை தாங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், பெண் தலைமை தாங்கும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், அவர்களுக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான திட்ட ஆவணங்களும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினரால் இலங்கைக்கான கனேடிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!