திலீபன் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் அகற்றப்பட்டன

நல்லூர், யாழ்ப்பாண  பல்கலைக்கழக வளாகம் ஆகிய இடங்களில் தியாக தீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்களையும், நினைவு வளைவுகளையும் பொலிஸார் அகற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.  

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் இன்றாகும். திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு யாழ்.நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகழ்வுகளைத் தடை செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் நினைவேந்தல் வளைவுகளும், திருவுருவப்படங்களும் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!