ஐ.தே.க.பிரதித் தலைவராக ருவான் தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடியபோது, பிரதித் தலைவர் பதவிக்கு ருவான் விஜேவர்தன, ரவி கருணாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இரகசிய வாக்கெடுப்பில் ருவான் விஜேவர்தன 28 வாக்குகளையும், ரவி கருணாநாயக்க 10 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதையடுத்து ருவான் விஜேவர்தன கட்சியின் பிரதித் தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

இதற்கு முன்னர் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ பதவி வகித்தார். அவர் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அமைத்துள்ளதால் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!