பூசா கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றவாளிகள் சிலரினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கஞ்சிப்பானை இம்ரான், பொடி லெசீ, தெமட்டகொடை சமிந்த, புளுமென்டல் சங்க, கணேமுல்ல சஞ்சீவ, ஜப்பான் சூட்டி, பறை சுதா உள்ளிட்ட பிரபல பாதாளக்குழு உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் செய்தனர்.

பூசா சிறைச்சாலையின் விசேட பிரிவின் 45 கைதிகள் கடந்த 10ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் 25 பேர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்றுவரை 20 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.

கொரோனா வைரஸ் நோய் பரவல் வேளையில் உறவினர்கள் சந்திப்பதற்கு முடியாமை காரணமாக வழங்கப்பட்ட தொலைபேசி வசதிகளை நீக்கியமை, கைதிகளைச் சந்திப்பதற்கு வரும் சட்டத்தரணிகளைச் சோதனைக்கு உட்படுத்துகின்றமை, விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!