போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் 13 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று முற்பகல் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.