வீதி ஒழுங்குச் சட்டத்தால் கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கொழும்பில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள வீதி ஒழுங்கை சட்டத்தால் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை முதல் கொழும்பில் பேஸ்லைன் வீதி , ஹைலெவல் வீதி , காலி வீதி உள்ளிட்ட பிரதான வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்தந்தந்த வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒழுங்குக‌ளிலேயே வாகனங்கள் பயணிக்க வேண்டும்.

இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பேலியகொட, மற்றும் களனி ப‌லங்களை அண்மித்த பகுதி , தெஹிவளை , பொரளை , நுகேகொட ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகளிலும் குறுக்கு வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!