சோமாலியவில் அவதிப்படும் இலங்கையர்கள்

கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக சோமாலிய தலைநகர் மொஹாதிசுவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

13 இலங்கையர்கள் சுமார் 6 மாதகாலமாக சம்பளமும் இல்லாமல் மொஹாதிசுவில் அல்லல் படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சோமாலியாவில் இலங்கை தூதரகம் ஒன்று இல்லாத நிலையில் இந்துனேசியாவில் உள்ள தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தம்மை இலங்கைக்கு அழைத்துவர அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மொஹாதிசுவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!