சட்டவிரோதமாக மாணிகக்கல் அகழ்ந்தவர் மரணம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சிக் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ முயன்ற ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.பண்டார தெரிவித்தார்.
மாணிக்கக்கல் அகழ்வதற்காக வெட்டிய குழியில் மண்திட்டு சரிந்ததில் 26 வயதுடைய சுப்பிரமணியம் அமிலசந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவர் நேற்றிரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியாப் பொலிஸ் நிலையப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்