அவுக்கணை புத்தர் சிலைக்கு முதலாவது மலர் பூஜை

மாலபே, ஸ்ரீ விமலாராம விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 18 முழம் உயரமான அவுக்கணை புத்தர்சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் பௌத்த மாளிகை மற்றும் மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று (12) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

தர்மாயதனாதிபதி வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ஷ தேரர் 18 முழம் உயரமான அவுக்கணை புத்தர் சிலையை திறந்து வைத்தார்.

அதற்கான நினைவு பலகை மற்றும் புத்தர் சிலைக்கான முதலாவது மலர் பூஜை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நடத்தப்பட்டது.

மேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் பேராசிரியர் மெதகம நந்தவங்ஷ தேரர், ஸ்ரீலங்கா ராமக்ஞா மஹா நிகாயவின் பிரதி பதிவாளர், மாலபே, ஸ்ரீ விமலாராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி விலேபொட குணசிறி தேரர் உள்ளிட்ட மரியாதைக்குரிய மஹாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதீப் உதுகொட, ஜகத் குமார, பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!