விற்பதற்காகக் கழுவிக் காயவைக்கப்பட்ட முகக்கவசங்கள் சிக்கின
கொழும்பு, கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் முகக்கவசங்கள் உலர வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மீண்டும் பயன்படுத்த முடியாத 3 ஆயிரத்து 128 முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புறக்கோட்டைப் பொலிஸாருடன் அந்த இடத்தைச் சுற்றிவளைத்தபோது அங்கு ஆயிரக்கணக்கான நீலம், வெள்ளை மற்றும் KN 95 ரக முகக்கவசங்கள் உலர வைக்கப்பட்டிருந்தன என்று கோட்டை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.பீ.லால் தெரிவித்தார்.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், மழையில் நனைந்த காரணத்தால் முகக் கசவங்கக் இவ்வாறு உலர வைக்கப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், சந்தேகத்தின் பேரில் உரிமையாளரைக் கைது செய்த புறக்கோட்டை பொலிஸார், முகக்கவசங்களைக் கைப்பற்றினர்.