சஜித்தின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு தினேஷ் வலியுறுத்து

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துகள் பாராளுமன்ற ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபாநாயகரிடம் நேற்று கோரிக்கை விடுத்தார்.

“நீதிமன்றத்தின் அனுமதியுடன்தான் பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். எனவே, அவரின் எம்.பி. பதவியை இந்தச் சபையில் சர்ச்சைக்குரியதாக்கும் வகையில் பேச எவருக்கும் அருகதை இல்லை” எனவும் அவர் மேலும் கூறினார்.

எனினும், தனது உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்க முடியாது இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதிலடி வழங்கினார்.

“முன்பிருந்த சபாநாயகர்கள் பாராளுமன்றத்துக்கு வழங்கியிருந்த முன்னுதாரணங்களைப் பின்பற்ற வேண்டுமென்றே நான் கேட்டுக்கொண்டேன். எனது உரை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட்டால், அது ஜனநாயக விரோத செயற்பாடாகும்” எனவும் சஜித் பிரேமதாஸ  கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!