மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் – பிரதமர் மகிந்த
மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான சோமவங்ச கோதாகொட தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமா என கதிர்காமத்தில் கோதாகொட, பிரதமரிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்துள்ள பிரதமர், மாகாணசபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் எனவும் அதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மாகாணசபைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியானாலும் அவை அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல எனவும் பிரதமர் இதன் போது கூறியுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் அத்மிரல் சரத் வீரசேகர மாத்திரல்லாது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான யுத்துகம அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்கவும் மாகாணசபை முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் இருக்கிறார்.