கொழும்பில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) பன்னிரண்டு மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை இரவு 10 மணி முதல் நாள் மறுதினம் முற்பகல் 10 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோக அமைப்பின் அத்தியாவசிய மேம்படுத்தல் பணி, அம்பதலேயில் இருந்து எலிஹவுஸ் வரையான நீர் விநியோக பிரதான குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!