கோப் குழு உறுப்பினராக சாணக்கியன் நியமனம்

9 ஆவது பாராளுமன்றின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று (11) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவால் இது குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சுனில் பிரேமஜயந்த, ஜயந்த சமரவீர, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சரத் வீரசேகர, டி.வி. சானக்க, நாலக கொடஹெவா, அஜித் நிவாட் கப்ரல், ரவூப் ஹக்கீம், அனுரகுமார திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க, ஜெகத் புஷ்பகுமார, எரான் விக்ரமரட்ன, ரஞ்சன் ராமநாயக்க, நளின் பண்டார, எஸ்.எம். மரிக்கார், பிரேம்நாத் சி. தொலவத்த, இரா. சாணக்கியன், சரித ஹேரத் ஆகியோரே கோப் குழுவின் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!