மலையக மக்கள் முன்னணியின் புதிய செயலாளர், பிரதி தலைவர் நியமனம்
மலையக மக்கள் முன்னணியின் புதிய செயலாளர் நாயகமாக பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தலைவராக ஏ.லோரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் கொழும்பில் நேற்று முன்தினம் (09) கூடி இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டம் கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன், கூட்டத்தில் கட்சியின் அரசியல் துறை தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார், கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், பிரதி செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன் உட்பட கட்சியின் அனைத்து உயர்பீட கவுன்சில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.