ஸ்ரீசாந்தின் தடைக்காலம் முடிவடைகிறது

இந்திய கிரிக்கெட் சபையின் தடைக்காலம் முடியும் நிலையில், இன்னும் ஏழு வருட கிரிக்கெட் வாழ்க்கை மீதமுள்ளது என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் செப்டம்பர் 13‍ஆம் திகதி இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது பிசிசிஐ. பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அவரது தடைக்காலம் முடிய இருக்கிறது.

இந்நிலையில் இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் மீதமுள்ளது என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் 2021 ஐபிஎல் ஏலத்தில் பெயரை உறுதியாக சேர்ப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரள மாநில அணிக்காக ஸ்ரீசாந்த் விளையாடுவார் என்று கூறிவந்த நிலையில், பயிற்சியாளரும், க‌ப்டனும் அதை உறுதிப்படுத்தவில்லை. தற்போது அவருக்கு 37 வயது என்பதால், அவருடைய உடற்தகுதி, முன்னணி கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்து கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!