நாட்டிற்காக ஐ.பி.எல். போட்டிகளை தவிர்த்த நடுவர் தர்மசேன!
இலங்கையின் கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன பணம் கொழிக்கும் ஐ.பி.எல். போட்டிகளைத் தவிர்த்து, இலங்கை அணி பங்குகொள்ளும் டெஸ்ட் போட்டிகளில் நடுவராக களமிறங்க முடிவெடுத்திருக்கிறார். இன்னும் 9 நாட்களில் ஆரம்பிக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்ற தர்மசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அதனை தவிர்த்து நாட்டின் கடமைக்கு அவர் முன்னுரிமை கொடுத்திருக்கிறார்.
கொரோனா காரணமாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்தும் நாடுகள் தங்களுடைய நாட்டு நடுவர்களையே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிற விதி தளர்வை ஐ.சி.சி. அறிவித்து இருக்கிறது. இதன்பிரகாரம், இலங்கை – பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடருக்கு நடுவராக களமிறங்க குமார் தர்மசேன முடிவு செய்திருக்கிறார்.