கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்ட ‘எம்.ரி. நியூ டயமண்ட்’ கப்பல்

கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளான ‘எம்.ரி. நியூ டயமண்ட்’ எண்ணெய்க் கப்பல் இருந்த கடல் பகுதியில் தென்படும் எரிபொருள் படிமம் அந்தக் கப்பலின் எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்டவை என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் கப்பலில் உள்ள மசகு எண்ணெய் தாங்கியில் இருந்து இதுவரை எந்தவித கசிவும் ஏற்படவில்லை என்று கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் கடற்படையின் சுழியோடிகளைப் பயன்படுத்தி கப்பலின் கீழ் பகுதியை ஆராயத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கப்பலால் இலங்கைக் கடற்பரப்புக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க, கப்பலை நாட்டில் இருந்து 200 கடல் மைல் தூரத்துக்கு இழுத்துச் செல்லுமாறு சட்டமா அதிபர், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று 33 கடல் மைல் தொலைவில் இருந்த கப்பல், இன்று காலை 50 கடல் மைல் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது எனக் கடற்படைத் தகவல்கள் தெரிவித்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!