சுவீடனில் குடியேறுகிறார் ஜொன்டி ரொட்ஸ்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரொட்ஸ், சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கேயே குடியேறுகிறார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் தலை சிறந்த கள‌த்தடுப்பாளராகத் திகழ்ந்தவர். இவர் சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறார்.

ஜொன்டி ரொட்ஸ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களத்தடுப்பு பயிற்சியாளராக இருந்தார். இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை கள‌த்தடுப்பு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!