மத்திய கிழக்கிலிருந்து 664 பேர் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் மேலும் 664 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரின் டோஹாவிலிருந்து 81 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து 293 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து 290 பேர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!