ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி சபாநாயகர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ரொபேர்ட் ஜுஹாம் ஆகியோர் நேற்று (09) பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தனர்.
விசேட விருந்தினருக்கான அறையில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.