கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவை அவமதிப்பதாக அமையும்! – ட்ரம்ப்

எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அவரை எதிர்த்து முன்னாள் துணை ஜனாதிபதி யான ஜோய் பிடன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

இதனையடுத்து அமெரிக்காவின் கறுப்பின மக்களின் ஆதரவைப் பெற, ஜோ பைடன் ஜமேகாவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியத் தாய்க்கும் பிறந்த கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தால் அது அமெரிக்காவை அவமதிப்பதாக அமையுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

கரோலினாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “கமலா ஹாரிஸை மக்கள் விரும்பவில்லை என்றும், அவர் ஒருபோதும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக வர முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!