சுஷாந்த் சிங்கின் மரணம்: ரியா சக்ரபோர்த்தி கைது!
பிரபல பொலிவூட் நடிகரான சுசாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து சுஷாந்தின் மரணத்திற்கு அவரது காதலியும் பொலிவூட் நடிகையுமான ரியா சக்ரபோர்த்திதான் காரணமென சுசாந்தின் தந்தை கே.கே. சிங். அவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
குறித்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில் ரியாவின் தொலைபேசியிலிருந்து ஜெய சஹா என்ற நபருக்கு அனுப்பிய வட்ஸ்அப் தகவலில் எம்.டி.எம்.ஏ., மரிஜுவானா மற்றும் பிற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ரியா பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரியா மீது போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு, டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் 3 பேர் கொண்ட குழுவினரால் இவ் வழக்கு மூன்று நாட்களாக விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில், ரியா கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.