கப்பலுக்கு அருகில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவை பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/shipAcoVLe.jpg)
தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ கப்பலுக்கு அருகில் கடலில் பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணெய் மாதிரியை பகுப்பாய்வு செய்வதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைத்திற்கு ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் எண்ணெய்க் கசிவை தடுக்குமாறும் சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
“MT New Diamond“ கப்பலில் இருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் பரவியுள்ள எண்ணெய்க் கசிவு டீசல் அல்லாத தார் போன்ற விஷேட வகையான எண்ணெய் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்தினர் சட்டமா அதிபருக்கு இன்று (09) அறிவித்துள்ளனர்.