பிரேமலாலின் சத்தியப்பிரமாணம் அரசமைப்புக்கு முரணானது அல்ல
“மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சகல உரிமைகளும் உள்ளன.”
– இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சி எம்.பியாக பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.
சபாநாயகர் இதன்போது அரசமைப்பின் குறித்த சரத்தை சபையில் வாசித்துக் காட்டினார்.