20 ஆவது திருத்தத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகவும், 19 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று 19 பிளஸ் என்ற செயற்றிட்டத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சக்தியினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர்  மாலை 4 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள மாதுலுவாவே சோபித தேரருடைய உருவச் சிலைக்கு முன்னால் உறுதிமொழி எடுத்த பின்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, வடிவேல் சுரேஷ் , அ.அரவிந்குமார், கபீர் ஹாசீம், முஜிபுர் ரஹ்மான், ஹெக்டர் அப்புஹாமி, கயந்த கருணாதிலக, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், ஜே.சி.அலவத்துவல, இந்துநில் துஷார அமரசேன, லக்ஸ்மன் கிரியெல்ல, எரான் விக்கிரமரத்ன, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!