சர்வதேசம் வரும் என மாயை காட்டாதீர்கள் – வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் சாடல்

“நாங்கள் கடந்த முப்பது வருடங்களாக முப்படை வைத்துப் போராடினோம். அதன் மூலம் கிடைக்காத ஒன்றை தமிழ் அரசியல்வாதிகள் திரும்பவும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மூலம் பெறப்போகின்றோம் என்று கூறுகின்றார்கள். ஆனால், இந்தச் சர்வதேச நாடுகள் எல்லாம் 2009ஆம் ஆண்டு எமது மக்கள் கொத்துக் கொத்தாய் அழியும்போது வரவில்லை. அப்படிப்பட்ட அவர்கள் இப்போது வருவார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் மாயை காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி – மாயவனூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“எமக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவை எவற்றையும் எமது தமிழ் அரசியல்வாதிகள் பார்ப்பதில்லை. அவர்கள் தமிழர் என்ற மாயையை மாத்திரம் காட்டி தமிழருக்கு உரிமை வேண்டும் என்று கடந்த 75 வருடங்களாக இதனையே கூறிக் கொண்டு வருகின்றனர்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!