கோமாவிலிருந்து மீண்டார் அலெக்ஸி

ரஷ்ய எதிர்க் கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கோமா நிலையிலிருந்து மீண்டுவிட்டதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெர்லின் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“அலெக்ஸி கோமா நிலையிலிருந்து மீண்டுவிட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது”  – என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை அலெக்ஸி நவால்னியின் மனைவியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். கடந்த வாரம்தான் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வழங்கப்பட்டதை ஜேர்மனி அரசு உறுதிப்படுத்தியது.

ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு புட்டின் விஷம் வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஜேமனி தெரிவித்துள்ளது. மேலும் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!