18,900 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
18 ஆயிரத்து 900 போதை மாத்திரைகள் கொண்ட 189 பெட்டிகளுடன் மூவர், மோதறைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மோதறைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று மாலை மோதறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம வீதியில் போதை மாத்திரைகளுடன் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்மலானை, தெரணியகல, வெல்லம்பிட்டி ஆகிய இடங்கலைச் சேர்ந்த பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்களிடம் மோதறைப் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்