பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

எதிர்கட்சியினரின் எதிர்பிற்கு மத்தியில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் இன்று பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்.

இன்றைய அமர்வின் போது பிரேமலால் ஜயசேகரவின் பதவி பிரமாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர 104,237 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இருப்பினும் கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி கொலை வழக்கு தொடர்பில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!