ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வில் இருந்து வௌளிநடப்புச் செய்தனர்.
இதனால் இன்றைய அமர்வின் போது பிரேமலால் ஜயசேகரவின் பதவி பிரமாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.