இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்
தமிழ் நாட்டில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கான்ஸ்டபிளை விளக்கமறியில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனுஸ்கோடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சபுகஸ்கந்த பகுதியில் 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபரான அவர் பொலிஸாரால் தேடப்பட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.