ஐ.தே.கவின் தலைவிதியை மாற்ற சஜித்தால் மாத்திரம் முடியும் – திஸ்ஸ அத்தநாயக்க

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவிதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனநாயகத்துக்கு விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதற்குத்  தலைமை தாங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தயாராகவுள்ளார்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!