பிரான்ஸ் நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல் பாடி அசத்திய சிறுமி
பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
உலக நாடுகளில் மிகப் பிரபலமானது தி வாய்ஸ் நிகழ்ச்சி, திவாய்ஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவது ரசிகர்கள் உண்டு.
இந்த நிலையில் பிரான்ஸில் நடந்த தி வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனிஷா என்ற சிறுமி இசையமைப்பாளர் தமன் இசையமைத்த சொப்பன சுந்தரி பாடலை பாடினார்.
அவரது குரலால் ஈர்க்கப்பட்ட நடுவர்கள் அவரை தேர்ந்தெடுத்து அவருக்கு பாராட்டுகளை வழங்குகின்றனர். இதனைத் தொடந்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
நெட்டிசன்கள் பலரும் அச்சிறுமிக்கு பாராட்டு தெரிவித்து இசையமைப்பாளர் இமானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.