ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கம்
நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று முதல் அமுலாகும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
கடந்த 13 ஆம் திகதி முதல் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.