வெலிக்கடை சிறையிலிருந்து கைத் தொலைபேசிகள் மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிறைக்கூடத்திலிருந்து, கைத் தொலைபேசிகள் சட்டவிரோத உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு நடத்திய விசேட சோதனையின்போதே, இத்தகைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதன்போது, 13 கைத் தொலைபேசிபேசிகள், 07 சிம் அட்டைகள், 150 பற்றரிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி உபகரணங்கள் மீட்கப்பட்ட சிறைக் கூடத்தில் இருக்கும் பெண் கைதிகள் தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சிறைச்சாலை புலனாய்வுப்  பிரிவு வழங்கும் தகவலுக்கமைய,  மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென, ஆணையாளர் நாயகம்  ஏக்கநாயக்க  மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!