இலங்கை வந்த விசேட நிபுணர்கள் குழு

அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியூ ட​யமன்ட் கப்பலை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். நிபுணர்கள் குழுவில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர்

இதேவேளை, கப்பலில் இருந்து எண்ணை கசிவு ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் 20 பொறியியலாளர்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழு குறித்த கப்பல் தொடர்பில் ஆராயும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் நேற்று (6) மாலை வாடிவீட்டு கடற்கரையோரமாக சென்று கடற்படையின் வேகப்படகின் ஊடாக ஆழ்கடலில் தரித்துள்ள கடற்படையின் யுத்தகப்பல் ஒன்றின் ஊடாக தீப்பற்றிய பாரிய கப்பலை நோக்கி சென்றனர்.

கச்சா எண்ணெய் கப்பல்களை கையாளும் திறன் கொண்ட மேலும் 2 இழுவை படகுகள் சிங்கப்பூர் மற்றும் மொரீசியசில் இருந்து இலங்கை விரைந்துள்ளன.

தீ பிடித்த கப்பல் தற்போது இலங்கைக் கரையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் இருந்த 23 ஊழியர்களில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள்  தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கப்பலில் பிடித்த தீ கட்டுக்குள் இருப்பதாகவும், மேலும் பரவாமல் இருக்க இயந்திர அறையை ஒட்டியுள்ள தகடுகள் தொடர்ந்து குளிர்விக்கப்பட்டு வருவதாகவும் இந்திய கடலோர காவல் படை கூறியுள்ளது. கப்பலில் பிடித்த தீயை அணைப்பது, அதுவும் நடுக்கடலில் அணைப்பது மிகவும் சிக்கலானது எனக்கூறியுள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள், அதுவும் இந்த சம்பவத்தில் தீ பிடித்த இயந்திர அறை கப்பலின் அடிப்பகுதியில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!