எண்ணெய்க் கப்பலில் பிடித்த தீ அபாயம் தவிர்க்கப்பட்டது

இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலில் இரு நாட்களுக்கு முன் தீவிபத்து ஏற்பட்டது. அது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்திய எண்ணெய்க் கப்பல் ‘தி டைமண்ட்’ குவைத் நாட்டிலுள்ள மினா அல் அஹ்மாதி என்ற துறைமுகத்திலிருந்து 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் தொன்கள் கச்சா எண்ணெயை நிரப்பிக் கொண்டு இந்தியாவின் பாரதிப் துறைமுகம் நோக்கி சென்றது. அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.

கப்பல் இலங்கைக்கு கிழக்கே 35 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது என்ஜின் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது. கப்பலில் 23 பணியாளர்கள் இருந்துள்ளனர். அதில் ஒருவர் பலியானார்.

தற்போது இந்திய, இலங்கை கப்பல்களின் கூட்டு முயற்சியால் இயந்திரப் பகுதியில் பரவிய தீ மேலும் பரவாமல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலில் எண்ணெய் படலம் பரவும் அபாயமும் தவிர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!