கப்பலின் தீயை அணைக்க போராடியவர்களுக்கு ஜனாதிபதி நன்றி

பனாமா நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத்தில் தீப்பிடித்திருந்த நிலையில் அந்தத் தீயை அணைக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடிய அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ ‘ருவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்’ பக்கங்களில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ‘எம்.டி. நியூ டயமண்ட்’  எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கைத் துறைமுக அதிகார சபை மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் உங்கள் பணியை நான் பெரிதும் பாராட்டுகின்றேன் – என்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!