ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழு ஹக்கீமிடம் விசாரணை

இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக கொழும்பிலுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று முற்பகல் அவர் அந்த ஆணைக்குழுவுக்குச் சென்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!