மீண்டும் டெங்கு நோய் தலைதூக்கும் அபாயம்
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/09/denku9-05_d299f7a2-c8f8-484c-a1ff-cd39a6fcc37d_140367_thumb.jpg)
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது எனத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு காரணமாக 25 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
அத்தோடு, இக்காலப்பகுதியினுள் 26 ஆயிரத்து 238 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, தங்களது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்