விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்கில் பறந்த மனிதன்
லாஸ்ஏஞ்ஜல்ஸ் சர்வதேச விமனாநிலையம் அருகே 3,000 அடி உயரத்தில் விமானத்திற்கு இணையாக ஒருவர் ஜெட்பேக்கில் பறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை விசாரணையை தொடக்கி உள்ளது. கடந்த ஞாயிறன்று லாஸ்ஏஞ்ஜெல்ஸ் அருகே பறந்த ‘ஜெட்ப்ளு 23’ விமானத்தின் விமானிகள் வித்தியாசமான காட்சியை கண்டுள்ளனர். பொதுவாக விமானிகள் விமான பயணத்தின் போது பறவைகள், ட்ரோன்கள் போன்றவற்றை மட்டுமே பார்த்து பழக்கப்பட்டவர்கள். ஆனால், அன்று அவர்கள் ஒரு மனிதன் ஜெட்பேக்கில் விமானத்திற்கு மிக அருகே பறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட விமானிகள், தங்கள் விமானத்திற்கு இடது பக்கம் 300 யார்டுகள் தொலைவில் ஜெட்பேக்கில் ஒருவர் பறந்ததாக தெரிவித்தனர். 30 விநாடிகளில் அவர் மறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்’ இதையடுத்து அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க மத்திய புலானாய்வுத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.