அரசியல் பழிவாங்கல்கள் குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் (2015-2019) தொடர்பில் ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை நேற்று (02) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
2015-2019 காலப்பகுதியில் அரச மற்றும் அரை அரச சேவையில் நிர்வாக ரீதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான 6952 பேரில் இருவர் இதுவரை இக்குழுவில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
1152 பேரின் மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகள், அவதானிப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் என்பன இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2015-2019 காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுள்ள விதம், குழுவில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் குறித்து ஆராயும் போது தெளிவாகியதாக குழு உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கினர்.