20 ஆவது திருத்த வரைபுக்கு அமைச்சரவை அனுமதி

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் 20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைபை விரைவில் வர்த்தமானியில் வெளியிடவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஒருவர் இரண்டு முறை பதவி வகித்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளுக்கு மட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களைத் தவிர  ஏனைய அனைத்து விடயங்களையும் நீக்க 20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!