இன, மத ரீதியான முரண்பாடுகளை ஊக்குவிக்கும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்

 இன மற்றும் மத ரீதியான பிரிந்துள்ள அனைத்து இலங்கையர்களை ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதற்காக இளைஞர், யுவதிகள் முன்னின்று செயற்பட வேண்டியது அவசியம் என பேராயர் கனேமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

”அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதால்தான் 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் அதன் பின்னர் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனது. இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் 30 வருட யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டது´.

நாட்டில் இன மற்றும் மத ரீதியான பிளவுகள் ஏற்பட அரசியல்வாதிகள் பொறுப்புகூற வேண்டியது அவசியம் அரசியல்வாதிகள் இன மற்றும் மத ரீதியான கருத்துக்களை அரசியல் மேடைகளில் பிரதான பேசி பொருளாக்கியுள்ளனர்.

எனவே, இன மற்றும் மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படும் வகையில் செயற்படும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும். அதேபோல் பாடசாலை மாணவர்களுக்கு இரு பிரதான மொழிகளும் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்.

பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு சகல மதம் மற்றும் கலாச்சாரங்கள் அமைய வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!