ரஞ்சித்தும் மாரசிங்கவும் இன்று ஆணைக்குழுவில் வாக்குமூலம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் நேற்றுமுன்தினம் ஆணைக்குழுவின் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது