இலங்கைக்கு 200 வென்டிலேட்டர்களை அன்பளிப்பு செய்த அமெரிக்கா
முக்கியமாக தேவைப்படும் பொருட்களுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சலுகை மற்றும் COVID-19 இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுதலின் அடிப்படையில் வழங்கப்படும் 200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை (மூச்சுக்காற்றூட்ட கருவி) சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸினால் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் அவை கையளிக்கப்பட்டன.